Tuesday, January 10, 2017

09.01.2017 மாநில பொறுப்பாளர்கள் சென்னையில் பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர், இயக்குனர்களை சந்திப்பு பற்றிய செய்தி

🌻  (( 09/01/2017) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொறுப்பாளர்கள் குழு காலை 9.30 மணிக்கு முன்னால் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

🌻பின் பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு பாண்டியராஜன் அவர்களை சந்தித்து இயக்கம் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, நமது நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர், அறிவியல் உ.தொ.க.அலுவலர் பதவிஉயர்வு மற்றும் முன்னனுமதியின்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்களின் மீது நடவடிக்கையை தவிர்த்து பின்னனுமதி வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
🌻தொடர்ந்து பள்ளிக்கல்வி செயலர் மதிப்புமிகு சபிதா அவர்களையும் சந்தித்து மேற்கண்ட கோரிக்கை குறித்து வலியுறுத்தப்பட்டது.
🌻பின் பள்ளிக்கல்வி இணை செயலாளர்கள் திருமதி. துரை வசந்தி, திரு.ரவிச்சந்திரன், திரு.வேதரத்தினம், திரு.தவசி அய்யாவு ஆகியோரை சந்தித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வு, உயர்நிலைபள்ளி பதவிஉயர்வு விகிதாசார நிலைகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
🌻பின் DPI வளாகம் சென்று தேர்வுத்துறை இணை இயக்குனர், பள்ளிக்கல்வி இணைஇயக்குனர் திரு.சேதுராமவர்மா, SCERT இணை இயக்குனர் திரு.P.குப்புசாமி சந்தித்து தனித்தனியாக பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை மனு வழங்கப்பட்டு தீர்வு காண கோரப்பட்டது.
🌻பின் மாலை 6.15வரை காத்திருந்து மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து 7.45 வரை நமது TNGTF இயக்கத்தின் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வு, உயர்கல்விக்கு பின்னேற்பு, கோவை DEEO, கோபி AEEO, ஊத்துக்குளி ஒன்றிய தலைமைஆசிரியர், பணிநிரவலில் சீனியர் ஆசிரியர் பாதிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
*TNGTF மாநில அமைப்புக்காக*

No comments:

Post a Comment