தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
***************************************************************************
மாநில செயற்குழு கூட்டம்
***************************************************************************
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் 01.05.2017 அன்று மாநில தலைவர் திரு. ஆனந்தகணேஷ் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் இயக்க பணிகள் மற்றும் தீர்மானங்கள் பற்றி விளக்கி எழுச்சியுரை ஆற்றினார். மாநில பொருளாளர் திரு. செல்லையா மற்றும் பிற மாநில பொறுப்பாளர்களும் மாவட்ட பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
> தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பரப்புரையில் கூறியப்படி புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஏற்படுத்தப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையினை விரைந்து சமர்பிக்க வேண்டும் மேலும் எவ்வித நிபந்தனை இன்றி பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
>> கடந்த 10 ஆண்டுகளாக தொடக்க கல்வி துறையில் நியமனம் செய்யப்பட்டு எவ்வித பதவிஉயர்வு வாய்ப்பு இல்லாமல் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கும் வகையில் தற்போதுள்ள பட்டதாரி /தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் எண்ணிக்கையின்படி நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிஉயர்வுக்கு புதிய அரசாணை வெளியிட வேண்டும்.
>> 2004 முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
>> ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையான முறையில் நடத்துதல் வேண்டும்.
>> தொடக்க கல்வி துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் தரஎண் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு வழங்குதல் வேண்டும்.
>> தொடக்க கல்வித்துறையில் அறிவியல் படிக்காதவர் அறிவியல் உதவித்தொடக்க கல்வி அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். அறிவியல் முதுகலை பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் அறிவியல் உதவித்தொடக்க கல்வி அலுவலராக அறிவியல் பாடம் பயின்றவர்களை நியமிக்க வேண்டும்.
>> 7வது ஊதியக்குழு ஊதியம் அமல்படுத்த வரை 20% தொகையினை இடைக்கால நிவரணம் வழங்க வேண்டும்.
*********************************************************************************
>> இயக்க வளர்ச்சிக்கான பிற தீர்மானங்கள்
>> இயக்க நாளிதழான ஆசான்மடல் துணை ஆசிரியராக
ரா.ஜெயக்குமார் - திருப்பூர் மாவட்டம்.
சிவசங்கர் - இராமநாதபுரம் மாவட்டம்
ராஜ் மோகன் - திருச்சி மாவட்டம்
நியமிக்க செயற்குழு ஒப்புதல்
>> 2017- 18 கல்வி ஆண்டுக்கான உறுப்பினர் சந்தா , உறுப்பினர் விவரப்பட்டியல் அடிக்கட்டையுடன் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முடித்து மாநில அமைப்பிடம் சமர்பிக்க செயற்குழு ஒப்புதல்.
>> அக்டோபர் மாதத்தில் இயக்கத்தின் தேர்தலை நடத்த செயற்குழு ஒப்புதல்
>> பேரியக்கத்தின் கோரிக்கை விளக்க மாநாடு நடத்துதல் குறித்து ஏற்பாடுகள் செய்ய மாநில நிர்வாககுழுவிற்கு செயற்குழு ஒப்புதல்.
********************************************************************************
மாநில அமைப்பு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment