நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை திருமதி : அ.க.ரேவதி அவர்கள் வரவேற்புரையுடன் துவக்கி வைத்தார். பின்னர் பதவிஉயர்வு பட்டதாரி தலைமை ஆசிரியை திருமதி: சாதனா அவர்களுக்கு திருமதி: ஜெயந்தி அவர்களும், திருமதி :பாரதி அவர்களும் பொன்னாடை அணிவித்தனர். தலைவர் திரு:சு.கருப்பண்ணன்அவர்கள் தலைமைஉரை ஆற்றினார்.
குறிப்பாக ஆசிரியர் நலன், TDS தாக்கல், CPS
ஒன்றிய, மாவட்டநிர்வாகிகள் தேர்வு சார்பாக உரையாற்றினார்.
ஒன்றிய, மாவட்டநிர்வாகிகள் தேர்வு சார்பாக உரையாற்றினார்.
செயலாளர் திரு:தே.செந்தில் அவர்கள்
2017-18 TNGTF உறுப்பினர் சேர்க்கை நோட்டீஸ் வெளியீடு செய்து
கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினார்.
1.நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவியை நடுநிலைப் பள்ளி பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
2.நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ( PG )பதவி உயர்வு வழங்க வேண்டும்.
3.அறிவியல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
4.TET தேர்வுக்கான அரசாணை வெளிவந்த நாள் 15-11-2017க்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
5.CPS திட்டத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் பழைய பென்சன் திட்டத்திற்கு மாற்ற வேண்டும்.
6.தொகுப்பூதிய காலத்தில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் தர வேண்டும்.
7.உதவி பெறும் பள்ளிகளில் உயர்கல்வி படிக்க முன் அனுமதி வழங்கும் அதிகாரத்தை பள்ளியின் தாளாளருக்கு வழங்க வேண்டும்.
8.ஆறாவது ஊதியகுழு குறைபாடுகளை களைந்து ஏழாவது ஊதிய குழுவை விரைந்து நடைமுறை படுத்த வேண்டும்.
9.பள்ளிக்கல்வித் துறையில் M.Phil / Ph.D-முன்அனுமதி வழங்கும் அதிகாரத்தை தலைமையாசிரியர்க்கு வழங்க வேண்டும்.
10.முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்க வேண்டும்.
11.CPS மறுஆய்வு குழு விரைந்து செயல்பட்டு ஆய்வறிக்கையை முடிக்க வேண்டும்.
12.இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
இறுதியில் பொருளாளர்
திரு:ர.ராமசந்திரன் அவர்கள்
நன்றி கூறினார்.




No comments:
Post a Comment