Friday, July 28, 2017

28.07.2017 - விழுப்புரம் மாவட்ட TNGTF செயற்குழு கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது

28-07-2017 அன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் (TNGTF) விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம்
பூந்தோட்டம் பாதை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மா.இ.செயலாளர் அன்பழகன் வரவேற்புரை ஆற்றவும் மா.செயலாளர் நாராயணன் தலமையுரை ஆற்றவும் மா.பொருளாளர் சசிக்குமார் முன்னிலை வகிக்கவும் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் செல்லையா சிறப்புரை ஆற்றவும் மா.து.தலைவர் பிரபாகரன் நன்றியுரையுடன் நடைபெற்றது 

மேற்படி கூட்டத்தில் கண்டமங்கலம் திருவெண்ணெய்நல்லூர் திருநாவலூர் வானூர் கோலியனூர்  திருக்கோவிலூர் காணை ஒன்றிய நிர்வாகிகள் முத்துவேலு செந்தில்குமார அன்புசிவம் கந்தன்  செல்வகுமார் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்

 கூட்டத்தில் 5-08-2017 அன்று சென்னையில்  JACTTO GEO சார்பில் நடைபெறும் 

CPS ரத்து 

எட்டாவது ஊதியக்குழு ஊதிய உயர்வு அமுல்படுத்துதல் அதுவரை 20%இடைக்கால நிவாரணம் வழங்குதல்

 கோரிக்கை ஆர்பாட்ட பேரணியில் அனைத்து ஆசிரிய உறுப்பினர்களும் திரளாக பல்வேறு வாகனங்கள் மூலம் கலந்துகொள்வது என்றும் செப்டம்பரில் விழுப்பரத்தில்  மாநில செயற்குழு மாநில பொதுச்செயலாளர் மதிப்புமிகு டாக்டர் பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் தலைமையில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment