Saturday, July 29, 2017

தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (29.07.2017) சிறப்பாக நடைபெற்றது


​தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் இன்று 29.7.17 மாலை மாவட்ட செயலாளர் திரு.பூசைத்துரை தலைமையில் நடைபெற்றது 
இணைச் செயலாளர் ஜெயராஜ் தீர்மானங்களை விளக்கி பேசினார் இறுதியில் திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 
🌸 *ஆகஸ்ட் 5ல் சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது​
🌺 ​நடுநிலைப்பள்ளி பட்டதாரிகள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றம் செய்யும் போது நியமன நாள் முதல் ஈர்த்துக்கொள்ள அனுமதித்தல்​
🥀 ​நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி பதவி உயர்வு அனுமதி​
🌼 ​நடுநிலைப் பள்ளி பட்டதாரிகளுக்கு பணி விதிகளை நிர்ணயம் செய்து பட்டதாரிகள் மட்டுமே நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற வேண்டும் என வலியுறுத்தல்​
🌻 ​கலந்தாய்வு மூலம் பணி மாற்றம் செய்யும் செய்யும் போது 5ஆண்டுகள் ஒரே ஒன்றியத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றிய/மாவட்ட மாறுதல் வாய்ப்பு அளித்து பின்னர் ஒன்றிய பதவி உயர்வு அளிக்க வேண்டும்​
🌷 ​2004-06 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்​
🌹 ​ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும்​

No comments:

Post a Comment