Sunday, July 2, 2017

ஈடுசெய் விடுப்பு இல்லை என CRC பயிற்சிக்கு வருகை சான்றிதழ் வழங்க மறுப்பு- TNGTF கண்டனம்

📌📌கண்டிக்கிறோம்📌📌

1.7.17 அன்று நடைபெற்ற upper primary CRC யில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு, பல மைய்ங்களில் வருகைச் சான்றிதழ் (Attendance Certificate) வழங்கப்படவில்லை.


சில ஒன்றியங்களில பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

*விடுமுறை நாட்களில் நடத்தப்படும் CRC பயிற்சி களுக்கு ஈடு செய்யும் விடுப்பு உண்டு என்று அரசாணை உள்ள நிலையில் SSA வின் இந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது.*விடுமுறை வழங்கும் அதிகாரம் BRTE களுக்கு உண்டா, வந்த நாட்களுக்கு வருகை சான்றிதழ் தருவதில் என்ன பிரச்சனை?

ஆதாரமற்ற தகவல்களை வைத்து கொண்டு CRC க்கு ஈடு செய்விடுப்பு இல்லை,M.L இல்லை என தொடர்ந்து BRTE கருத்துக்களை தெரிவிப்பது தேவையற்றது.

தலைமை ஆசிரியர் கூட்டங்களில், பள்ளிப் பார்வையில் இது போன்ற கருத்துகளை சில மாவட்ட கல்வி அலுவலர்களும் ,BRC ஒருங்கிணைப்பாளர்களும் பேசுவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

சங்கங்களின் முயற்சியால் ஆசிரியர்கள் பெற்று வரும் சலுகைகளை எந்த அரசாணையும் இன்றி மறுக்க முயல்வது அரசாணையை மீறும் செயலாகும்.

*அரசு வெளியிட்ட பள்ளி வேலை நாடகளை கூட முறையாக பின்பற்றாத SSA தன்னிச்சையாக செயல்படுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.*

இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்.

___*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*___

No comments:

Post a Comment