Saturday, December 23, 2017

நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) கபிலர்மலை ஒன்றிய கூட்டம் 23.12.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு   (TNGTF)
கபிலர்மலை ஒன்றிய கூட்டம், நாமக்கல் மாவட்டம்








 கபிலர்மலை ஒன்றிய கூட்டம்

 23-12-2017அன்று ஊ.ஒ.ந.நி.பள்ளி கொளகாட்டுப் புதூரில் நடைபெற்றது.

 கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் திருசு.கருப்பண்ணன்  தலைமை வகித்தார்

ஒன்றிய பொருளாளர் திருர.ராமசந்திரன் அனைவரையம் வரவேற்றார்

மாவட்ட பொருளாளர் திருதே.செந்தில் முன்னிலை
வகித்து

 இயக்க செயல்பாடுகள் மற்றும் கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்களுக்கு மாநகராட்சி வீடு வாடகைப்படி

 பெற்றுத்தருவது குறித்து பேசினார்.

 கூட்டத்தில் கபிலர்மலை ஒன்றிய பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 இறுதியில் ஒன்றிய செயலாளர் திருச.சண்முகசுந்தரம் நன்றி கூறினார் .

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1.2003 ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்படும் CPS புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து
 TPF பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

2. தமிழக அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 1-1-2016 முதல் 21மாத நிலுவைதொகை வழங்க வேண்டும்.

3.TET தேர்வுக்கான  அரசு ஆணை  வெளிவந்த நாள் 15-11-2017க்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசை வலியுறுத்துதல்.

4. தொடக்கக் கல்வி துறையில் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் விகிதாச்சாரம் 50:50 என்ற அடிப்படையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

5. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு பணிமாறுதல் மூலம் 10 ஆண்டுகள் பணிமுடித்த பட்டதாரி ஆசிரியர்களையும் ஊட்டுப் பதவியாக எடுத்துக்கொள்ள மாநில அமைப்பை வலியுறுத்துதல் .

6. நடு நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் ஊட்டுப்பதவியாக கொண்டே எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. தமிழக அரசு தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

8. மத்திய அரசுக்கு ஈடான வீட்டு வாடகைப்படியை தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.

9. தொடக்க கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் PG பதவி உயர்வு வழங்க வேண்டும்.

10. அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வவை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

11. ஈரோடு மாநகராட்சி வீட்டு வாடகை படி HRA கபிலர்மலை ஒன்றியதிற்கு பெற்று தர கூட்டு நடவடிக்கை குழுவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

12. அக்டோபர் 2017 நவம்பர் 2017 ஆகிய மாதங்களில் *ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம்பெற்று தர உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

13.நாமக்கல் மாவட்ட *முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பள்ளி பார்வை ஆய்வு மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிகாட்டும் போது நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி ஆசிரியர்களின் கண்ணியம் காக்க வேண்டுமாய் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது


தகவல்
கபிலர்மலை செந்தில்

No comments:

Post a Comment