Saturday, March 10, 2018

11.3.18 ம் தேதி , STFI தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க TNGTF மாநில பொதுச்செயலாளர் டெல்லி பயணம்

11.3.18 ம் தேதி , STFI  தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் முனைவர்.திரு.பி.பேட்ரிக் ரெய்மாண்ட் டெல்லி பயணம்.



டெல்லியில் வரும் 11ம் தேதி நடக்கும் இந்திய பள்ளீ  ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 8 ஆசிரியர் சங்கங்கள் செல்கின்றன.

அதில், 7வது தேசிய மாநாடு தயாரிப்புக் கூட்டம், தேசிய அளவிலான ஆசிரியர்களின் பிரச்னை, அவற்றை தீர்ப்பதற்கு வேண்டிய இயக்க செயல்பாடுகள், 2018-19ம் ஆண்டுக் கான திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடக்க உள்ளது. 

இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி,
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம், தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் டெல்லியில் நடக்க உள்ள செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment