இன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் *வியாழக்கிழமை (15/03/2018) சரியாக மாலை 5.30 மணியளவில் ராஜா பாரா மெடிக்கல் கல்லூரி வளாகத்தில்* நடைபெற்றது.
கூட்டத்தில் வரவேற்புரையை அறந்தாங்கி ஒன்றிய தலைவர் திரு.சு.சுரேஷ் அவர்கள் நிகழ்த்தினார். ஒன்றிய செயலாளர் திரு. K. குமார் அவர்கள் தலைமை ஏற்றார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. G. சுபாஷிணி அவர்களும், ஒன்றிய செயலாளர் திருமதி. கோ. ச. அனிதாசெந்தில் அவர்களும் வாழ்த்துரை வழங்கினா்.புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர்.திரு.D.சந்திரசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியின் நிறைவாக ஒன்றிய பொருளாளர்
திரு. ஆ.பழனித்துரை அவர்கள் நன்றியுரை கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் Transfer counseling -யை மாநில அளவில் நடத்திட வலியுறுத்துதல்.
2. நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு Unit transfer -யை மீண்டும்
அமல்படுத்த வலியுறுத்துதல்.
3. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
4. தமிழக அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகை வழங்கவேண்டும்.
5.TET தேர்வுக்காக அரசு ஆணை வெளிவந்த நாள் 15.11.2011 க்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசை வலியுறுத்துதல்.
6. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் ஊட்டுப் பதவியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
7. தமிழக அரசு தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக
அறிவிக்கவேண்டும்.
8. தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG )பதவி உயர்வு வழங்க வேண்டும்.
9. அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.





No comments:
Post a Comment