Wednesday, June 6, 2018

05.06.2018 சுற்றறிக்கை - பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் பற்றி TNGTF பொதுச்செயலாளர் இயக்குனரிடம் கோரிக்கை--

📌📌📌📌📌📌📌📌
இயக்கத் தோழர்களுக்கு வணக்கம்

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணி நிரவலை முழுமையாக கைவிட வேண்டும் , கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு பள்ளி மாணவர்களை தனியார் சேர்ப்பதை கைவிட வேண்டும் என்று நாம்  நடத்திய மே18 ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இந்த கோரிக்கைகளை கையிலெடுத்து போராடக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

போராட்ட முடிந்ததும் சோர்ந்துவிடாமல் பள்ளிக்கல்வி இயக்குனர், மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு நம்முடைய கோரிக்கைகளை விரிவாக வலியுறுத்தி அமைப்பின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது

 அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தது மட்டுமல்லாமல் சட்டமன்றத்திலும் நம்முடைய கருத்து எதிரொலித்து உள்ளது.

*இன்று தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் இணை இயக்குனர் உடன் தொடர்பு கொண்டு தொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் முழுமையாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 தற்போது கிடைத்துள்ள தகவலின் படி அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் மூன்று பட்டதாரி ஆசிரி யர்களும், ஒரு தலைமை ஆசிரியரும் இந்த ஆண்டு பள்ளியில் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் தொடர்ந்து பேசி வருகிறோம். வியாழன் மாலை உறுதியான தகவல் கிடைக்கும் அங்கேயும் பணிநிரவல் ஆசிரியர்கள் பாதிப்பில்லாத வகையில் நடத்துவதற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ள பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் பணியிடங்களை தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்

பட்டதாரி ஆசிரியர்களின் போர்வாள் TNGTF
-----------------------------------
பேட்ரிக் ரெய்மாண்ட்
 பொதுச் செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

No comments:

Post a Comment