Saturday, June 9, 2018

09.06.2018 - சுற்றறிக்கை - தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் ஒன்றியத்துக்கள் மட்டுமே,- TNGTF மாநில அமைப்பு

📌📌📌📌📌📌📌📌
இயக்கத் தோழர்களுக்கு வணக்கம்
தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணிநிரவல் ஒன்றியத்திற்குள் மட்டுமே ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் இல்லை (உறுதிப்படுத்தப்பட்ட தகவல)
6 7 8ம் வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் இரண்டு பட்டதாரி ஆசிரியர் ஒரு தலைமையாசிரியர் என்கிற நிலையை மாற்றி மீண்டும் அனைத்து நடுநிலைப்பள்ளியிலும் மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு தலைமை ஆசிரியரையும் தொடர்வது என தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இன்று பிற்பகல் தொடக்கக்கல்வி இயக்குனரின் அலைபேசியில் பேசிய போது இந்த தகவலை தெரிவித்தார்.
பட்டதாரி ஆசிரியர்களின் பாதுகாவலாக எப்போதும் நமது இயக்கம் செயல்பட்டு வருகிறது
மாநில அமைப்பு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

No comments:

Post a Comment