தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு..🌹🌹🌹🌹🌹🌹🌹
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு-தேனி மாவட்டகிளையின் சார்பில் மாவட்ட செயற்குழு & பொதுக்குழு கூட்டம் 10/12/17 இன்று தேனி ஜுவன் கல்வி மையத்தில் நடைபெற்றது..
மாவட்ட தலைவர் திரு.மனோகரன் தலைமை வகிக்க ,மாவட்ட செயலாளர் திரு.க.சந்திரன் முன்னிலை வகித்தார்..
மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த பட்டதாரி ஆசிரியர்களை மாவட்ட மகளரிர் அணிச் செயலாளர் திருமதி.மணிமாலா வரவேற்று பேசினார்..மாவட்ட நிர்வாகிகள் /வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இயக்க விளக்க உரையாற்றினர்..
கூட்ட முடிவில் மாவட்ட துனைத்தலைராக திரு.ரமேஷ்(ஆண்டிபட்டி ஓன்றியம்) அவர்களும்.மாவட்ட இனணச்செயலாளராக திரு.ஜெகதீசன்(போடி ஓன்றியம்) அவர்களும். மாவட்ட இலக்கிய அணி செயலாளராக திரு.மகேந்திரன்(க.மயிலை)அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்னர்...🌼🌼🌼🌼🌼🌼🌼
கூட்ட தீர்மானங்கள்:-
🌼அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு ,அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்..
🌼 தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு TRB தர எண் அடிப்படையில் முது கலை பட்டதாரி ஆசிரியர் பதவு உயர்வு தரவேண்டும்..
🌼நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வானது பட்டதாரி ஆசிரியர்களுக்கே வழங்கப்படவேண்டும்..
🌼அரசு /அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசியர்களுக்கு TET தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
🌼ஜாக்டோ ஜியோ போராட்ட களத்தில் பங்கு கொண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது..
🌼7வது ஊதியக்குழுவில் அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதியகுறைபாடுகளை நீக்க அரசு முன்வரவேண்டும்..
🌼அறிவியல் உதவிதொடக்ககல்வி அலுவலர் பதவி உயர்வினை மூத்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர்க்கு வழங்கும் வகையில் புதிய அரசானண வெளியிடப்படவேண்டும்..
🌼மாவட்டதொடக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டும்..
🌼வரும் ஜனவரி மாதத்தில் நமது இயக்கம் சார்பில் CPS ஒழிப்பு மாநாடு நடத்துவது & அதில் மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்களை கலந்து கொள்ள அழைப்பது.
மாவட்ட துனணத்தலைவர் .திரு.ரமேஸ் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது...
🎄🎄🎄🎄🎄🎄🎄
க.சந்திரன்..மாவட்ட செயலாளர்..
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
தேனி-மாவட்டம்.


No comments:
Post a Comment