Sunday, December 31, 2017

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டார தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம் 30 - 12 - 2017 அன்று நடைபெற்றது.










தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF)
நாகப்பட்டினம் மாவட்டம்
 குத்தாலம் வட்டாரக்    கூட்டம்
**************************************************************************************************************
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் குத்தாலம் வட்டாரக்கூட்டம் ...நி.பள்ளி, குத்தாலத்தில் 30 - 12 - 2017 அன்று வட்டாரத் தலைவர் திரு.சீ.முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உயர்நிலை, மேல்நிலைபள்ளி  பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.கே.ஜெய்குமார்தலைமை ஆசிரியர் திரு.சி.ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர் திரு.செ.ராஜலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.பி.மீராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் திரு..சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை முன்மொழிந்தார்மாவட்ட செயலாளர் திரு.கே.ஆர்.மகேஷ்
TNGTF 2018 காலண்டரை வட்டாரத்தலைவரிடம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் துணைத்தலைவர் திரு.சு.பாலமுருகன்,
துணைசெயலாளர் திரு.ஆர்.கார்த்திகேயன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.ஏகாம்பரம் மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் வட்டார பொருளாளர் திரு.டி.வாசுதேவன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர்.பீ.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்களுக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தல்

2.புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
3.ஏழாவது ஊதியக்குழுவின் படி 1-1-2016 முதல் 21 மாத நிலுவைத் தொகை வழங்கவேண்டும்.
4.நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களை மட்டுமே ஊட்டு பதவியாக அறிவிக்கவேண்டும்.
5.நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
6.அறிவியல் உதவித்தொடக்ககல்வி அலுவலர் பணியிடம்
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
7.TNGTFன் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க அனைவரும் தீவிரமாக செயல்படவேண்டும்.

No comments:

Post a Comment